ஐம் இய்யத் உலமாய் ஹிந்த் – ஓர் அறிமுகம்
இந்திய துணை கண்டத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வரலாறு அவர்களின் பழம் பெரும் இயக்கம் ஜம் இய்யத் உலமாயி ஹிந்த் நிகழ்த்திய மாபெரும் சாதனைகளை கூறாமல் நிறைவு பெற முடியாது . ஆங்கிலேயர்கள் 1803 ல் முகலாய அரசை வீழ்த்தி 1901 ல் துருக்கி உஸ்மானியா ஆட்சியை தோற்கடித்து மதசார்ப்பற்ற அததாதுர்க் கமால்பாஷாவை ஆட்சியில் நியமித்ததை அடுத்து ஃகிலாபத் இயக்கம் அர்த்தமற்றதாகி விட்டது . நவம்பர் 1919 ல் அம்ரித்ஸரில் ஃகிலாபத் கான்ஃப்ரன்சுக்காக கூடி இருந்த ஆலிம்கள் முஸ்லிம்களை சமதாய கூட்டுப் பிரச்சனைகளில் வழி நடத்த ஜம்இய்யத் உலமா எனும் இயக்கத்தை ஆரம்பித்தார்கள் . உலகத்தின் மேல் தன் ஆதிக்கத்தை திணித்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேறோடு அழிப்பற்காக கங்கணம் கட்டியிருந்த ஆங்கிலேய வல்லரசை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது தான் அத்தியாவசிய கடமைஎன்று ஜம்இய்யத் முடிவு செய்தது . முதன் முதலாக ஜீன் 1920 ல் ஆங்கிலேய அரசை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது . பிறகு 484 முக்கிய பிரபல மார்க்கறிஞர்கள் கையெழுத்துடன் அதை ஜம்இய்யத் வெளியிட்டது . அரசாங்கம் அதை தடை செய்தது . ஆனால் தொடர்ந்து பள்ளிகளிலும் திறந்த வெளிமேடைகளிலும் பொது மக்களுக்கு எல்லா நகரங்கலிலும் தொடர்ந்து அது படித்து காண்பிக்கப்பட்டது . இதற்காக முப்பதாயிரம் ஆலிம்களுக்கு மேல் கைது செய்யப்பட்டனர் . ஜூலை 1921 ல் நடந்த கராச்சி மாநாட்டில் ஆங்கிலேயர் அரசின் கீழ் வேலை செய்வதும் ஒத்துழைப்பதும் அறவே கூடாது என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள் . அதற்காக கைது செய்யப்பட்டு 2 வருட சிறை தண்டனை அனுபவித்தார்கள் . மார்ச் 1926 ல் கல்கத்தாவில் நடந்த 7 வது மாநாட்டில் முதன் முதலாக முழு சுதந்திரத்திற்காக தீர்மானம் கொண்டு வரப்பட்டது . ஆனால் காங்கிரஸ் கட்சி தயக்கத்துடன் வெறும் சில சலுகைகளை கேட்டு விட்டு
ஆங்கிலேய அரசு நீடிப்பதில் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை . ஐம்இப்பத் இதை எதிர்த்தது . மலபார் மாப்பிள்ளா போராளிகள் , மற்றும் பிஷாவர் அப்கானியர்கள் மேல் ஆங்கிலேய அரசு அடக்கு முறை படுகொலையில் ஈடுபட்டதை எதிர்த்து ஜம்இய்யத் விபரமான அறிக்கைகள் வெளியிட்டது . அரசாங்கம் இதையும் தடை செய்தது . தமது 9 வது பொது கூட்டத்தில் 1930 ம் வருடம் ஐம் இயத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முழு சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானித்தது . ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் அரசு அமைக்க அரசாங்கம் முன் வைத்த சைமன் கமிஷன் அறிக்கையை முதலில் ஜம்இய்யத் நிராகரித்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் நிராகரித்து விட்டது . 1935 ல் இந்திய அரசியல் சாஸனம் வடிவமைக்கப்பட்டது . அதில் முஸ்லிம் தனியார் சட்ட கோரிக்கை வைத்து ஜம்இய்யத் 1937 ல் அதை கொண்டு வருவதில் வெற்றி பெற்றது . பிரிவினையின் அடிப்படையில் பாகிஸ்தான் தனி நாடாக ஏற்படுத்துவதை ஜம் இய்யத் முழு பலமாக எதிர்த்து தேசத்தின் ஒற்றுமையை ஆதரித்தது . ஆனால் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய சூழ்ச்சிக்கு அடிபணிந்து முஸ்லிம்லீகின் தனி நாட்டு கோரிக்கையை ஆமோதித்தது . 1940 ல் இரண்டாவது உலகப்போரில் இந்திய இராணுவத்தினரை ஈடுபடுத்துவதை ஜம் இய்யத் கடுமையாக எதிர்த்து மறுபடியும் வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை முழங்கியது . ஜம் இய்யத் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர் . ஜின்னா மற்றும் சாவர்கர் போன்றவர்களை வளர்த்தி அரசாங்கம் பிரிவினைக்கு உருதுணையாக நின்றது . ஜம்இய்யத் இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை ஆதரித்தது . ஜம் இய்யத் தலைவர்கள் வகுப்புவாத முஸ்லிம்களின் வெறுப்புகளுக்கும் கோபத்திற்கும் ஆளாக்கப்பட்டனர் . பிறகு சுதந்திரத்திற்கு பெரும்பான்மைவகுப்புவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக உணர்ச்சிகளை பெரிய அளவில் தூண்டி விட்டு நாடெங்கும் கலவரங்கலில் முஸ்லிம்களின் உயிருக்கும் பொருருளுக்கும் கூட ஆபத்தும் இழப்பும் .
ஏற்படுத்தினார்கள் ஜம்இய்யத் முழு பலத்துடன் மைதானத்தில் இறங்கியது நடு நிலையான பெரும் தலைவர்களை அணுகி முல்லிம்களின் பாதுகாப்பிற்கு ஜம் இய்யத் போராடியது . உயிரையும் சொத்துக்களையும் இழந்த முஸ்லிம்களுக்கு நிவாரணம் அளித்து மறு வாழ்விற்கு புத்துணர்ச்சி அளித்தது . தொடர்ந்து வகுப்புவாதிகள் நாட்டின் ஒற்றுமைக்கே பெரும் ஆபத்து என்பதை உணர்த்தி அவர்களை தனிப்படுத்தவும் முயற்சி எடுத்து வெற்றி கண்டது . அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற தன்மையை வலியுறுத்தி சிறுபாண்மையினர் மொழி , மத கல்வி கலாச்சார உரிமைகளின் சட்ட பாதுகாப்புக்காக ஜம்இய்யத் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டது . வகுப்பு வாதத்தை எதிர்த்தும் சிறுபான்மையினரின் உரிமைகளை ஆதரித்தும் ஜம் இய்யத்தை சார்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள் . ஜம் இய்யத் தேர்தல் அரசியலிலிருந்து விலகி விட்டது . ஆனால் முஸ்லிம்களின் பிரச்சனைகளை அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கு ஐனநாயக முறையில் கொண்டு செல்வதில் தவறியது கிடையாது . சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட மூன்று அடிப்படையான விஷயங்களை முன் வைத்து தொடர்ந்து ஜம் இய்யத் போராடி வருகிறது . கலவரங்களில் உயிர் பொருள் சேதத்திற்கு இழப்பீடு தொகை வழங்குவது , மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளை உடன் நீக்குவது முஸ்லிம்களுக்கு ஜனத் தொகைக்கேற்ப எல்லா துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிப்பது அநியாயமாக பொய் வழக்குகளில் தடா போன்ற கருப்பு சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை வீணாக்கப்படும் அப்பாவி வாலிபர்களை விடுஷிப்பது . இந்த மூன்று கோரிக்கைகளுக்காக 1999 ல் 21 இலட்சம் கையெழுத்துக்கள் பெற்று ஜனாதிபதி.யிடம் ஜம் இய்யத் மனு கொடுத்தது .3 தடவை நாடெங்கும் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி டில்லியில் சிறை நிறப்பும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது . டிசம்பர் 22-1942 இரவில் பாபர் மசூதியில் சிலை வைக்கப்பட்டதும் அதை அகற்ற முயற்சி எடுத்து ஐம் இய்யத் வழக்குகளை தொடுத்தது . ஒவ்வொரு கட்டத்திலும்
நீதி மன்றத்தை அணுரி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை தடுத்தி வந்தது . பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த கலவரங்களில் உயிர் , பொருள் இழந்த முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு ஜம் இய்யத் எடுத்த முயற்சிகள் மறக்க முடியாதது . குஜராத் படுகொலைக்கு பிறகு உடனே பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் முதன் முதலாக ஜம் இய்யத் தான் சென்று நிவாரணம் , மருத்துவ , சட்ட உதவிகளுக்காக குழுக்களை அமைத்து பல ஆபத்துக்களையும் எதிர்த்து போராடியது . சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் தேசம் காப்போம் என்ற தலைப்பில் மதசார்ப்பற்ற நடுநிலையான அமைப்புகளை தொடர்ந்து 1995 ல் வ்கஃப் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது . 1976 ல் ஜம் இய்யத் வ்க்ஃப் கான்ஃபிரன்ஸ் நடத்தியது . பள்ளிவாசல்களையும் , அரபு மதரஸாகளையும் பயங்கரவாத முகாம்களாக வர்ணித்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி , உயர்கல்வியில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம் வாலிபர்களை சிறையில் அடக்கி , கல்வியில் காவி நிற திட்டங்களை திணித்து முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்புவாதிகளின் சூழ்ச்சிகளை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் பொது கூட்டங்கள் நடத்தி ஜம் இய்யத் கண்டித்தது . இதை எல்லாம் ஜம் இய்யத் நாட்டின் பொது நலத்தையும் வளர்ச்சியையும் முன் வைத்து தான் செய்து இருக்கிறது . சிருபான்மைவகுப்புவாதம் பெரும்பாண்மைவகுப்புவாதத்திற்கு உறுதுணையாகும் என்பதுஜம் இய்யத்தின் உறுதியான நம்பிக்கையாகும் . ஜம்இய்யத் நிவாரண நற்பணிகள் 1. ஜம்ஷேத்பூர் பாகல்பூர் , முராதாபாத் , மீரட் , மாலேகாம் போன்ற முஸ்லிம்வாழ் நகரங்களில் நடந்த ஏராளமான கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக ஜம் இய்யத் முழுபலத்துடன் ஈடுபட்டது . 2. நிவாரண , மருத்துவ , சட்டகுழுக்கள் அமைத்து பணிகளை முறைப்படுத்தி வந்தது . விசாரனை கமிஷன் அமைக்க கோரி கலவரத்துக்கு காரணமாக இருந்த வகுப்புவாதிகளின் முகமூடியை கிழித்தது . ஆனால் அந்த அறிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தி இருக்கிறது . 3 . பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து
நாடேங்கும் பெருமளவில் நடந்த கலவரங்கலில் பத்தாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் . எட்டு நாட்களில் இதை தடுத்து நிறுத்தி முஸ்லிம்களுக்கு நிவாரணமும் ஆறுதலும் அளிக்க ஜம் இய்யத் விடா முயற்சிசெய்தது . 4.குஜராத் பூகம்பம் தொடர்ந்து இனபடுகொலைகள் நடந்த பிறகு குடும்பங்களை இழந்த விதவைகள் மற்றும் அனாதைகளுக்கு 14 Childrens Village உருவாக்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தது . 5.2006 – தமிழ்நாட்டு கடற்கறை பகுதிகளில் சுனாமியின் காரணத்தால் பெருமளவில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் . முதன் முதலாக அவர்களை அணுகி உயிர் பொருள் சேதத்தை கணக்கெடுத்து உணவு , துணிமணிகள் , உதவிப்பெட்டிகள் வழங்கி நிவாரணம் அளித்தது . 6.சுனாமியில் வீடுகள் இழந்த முஸ்லிம்களுக்காக நாகூரில் 92- வீடுகளும் கோட்டைகுப்பத்தில் 78 வீடுகளும் சொந்தமாக இடம் வாங்கி கட்டி கொடுத்தது . காஷ்மீரில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு பிறகு மலைப்பகுதிகளில் பல சிரமங்கள் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து வீடுகளும் கட்டித்தந்தது . ஜம் இய்யத்தின் அடிப்படை நோக்கம் மார்க்க போதனை , உலகக் கல்வி , சமூக ஒருங்கிணைப்பு பொருளாதார முன்னேற்றம் போன்ற மேப்பாட்டு திட்டங்களை நடைமுறை படுத்துவதாகும் . சிறுதொழில் ஆரம்பிக்க வட்டியில்லாத வங்கி முறை முஸ்லிம் ஃபண்ட் என்ற பெயரிலும் எளிய முறையில் குடும்ப பிரச்சனைகளை நியாயமான முறையில் தீர்க்க மஹ்கமா ஷர் இய்யா என்ற பெயரிலும் மாநிலங்களில் ஜம் இய்யத் மன்றங்களை நடத்தி வருகிறது . நாட்டின் எல்லா மாநிலங்களிலும் ஜில்லா , நகர , ஊள்ளூர் ஜம் இய்யத் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன . 1,1 / 2 கோடி அடிப்படை உறுப்பினர்களை கொண்ட இந்த மாபெரும் இயக்கம் இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை தேர்தல் முறையில் அகில இந்திய மாநில தலைவர் . செயலாளர் . செயற்குழு உருப்பினர்களை தேர்ந்தெடுக்கிறது . நிர்வாக அமைப்பில் மார்க்க அறிஞர்கள் முக்கிய பங்கு வகிப்பது அவசியமாகும்